நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர்! சாதித்து காட்டிய இந்தியாவின் சந்திரயான்-3!.

0
296
நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர்! சாதித்து காட்டிய இந்தியாவின் சந்திரயான்-3!.
chandrayan n3 water in moon

நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்தது.

ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டர், ரோவர் பாகங்கள் உடன் சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளங்களுக்கு இடையே சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!
Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதே சந்திரன் 3 திட்டத்தின் முக்கிய பணியாகும்.

இந்நிலையில், நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது . நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகமுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன.

அதில், நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

Previous articleதர்மபுரி | 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசியம்!
Next articleஇரட்டை குழந்தை! காலம் தவறிய மருத்துவர்! சோகத்தில் புதுக்கோட்டை! முன்னாள் அமைச்சர் இரங்கல்!