இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

0
198

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்தப் பெண் வழக்கினை தொடுத்தார்.இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பொய்யான வாக்குறுதி கொடுத்து அந்த பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது ஒரிசா நீதிமன்றம்.

author avatar
Pavithra