ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் தான் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும்.
இன்று சமூக வலைத்தளத்தில் வரும் பல பொய்யான தகவல்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர் என்று இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் வருகின்ற ஒரு பொய்யான தகவலை நம்பி ரூ.49 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
அந்த நபர் சமீபத்தில் யூடியூப் ஒன்றில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளர் . அதில் நீங்கள் பார் டைம் ஆக யூடியூபில் வீடியோக்களை பார்ப்பதன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்று கூறியவாறு இருந்தது.
மேலும் இவரை வாட்சப்பில் அணுகி பல டாஸ்க்குகளை கொடுத்துள்ளனர். அவரும் அனைத்தையும் செய்து முடித்துள்ளார். அதிலிருந்து அவருக்கு ரூ.350 கிடைத்துள்ளது.
அதன் பிறகு நீங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ப உங்களுக்கு அமெரிக்க டாலர் வழங்கப்படும் இதனை உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வாட்சப்பில் வந்தது.
அந்த செய்தியை நம்பி இவரும் தன்னிடம் இருந்த ரூ.49 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அதுகுறித்த எந்த தகவலும் வராததால் உடனடியாக காவல் துறைக்கு சென்று புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரைபை ஏற்படுத்தி உள்ளது.