2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்!

Photo of author

By Parthipan K

கடந்த 2018 – 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் வரும் செப். 30ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கைளினால், வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2018 – 2019ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. அபராதம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த அவகாசம் செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த கால அவகாசத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், செய்யுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.