மன்கட் என்ற பெயரை பயன்படுத்துவதே தவறு

Photo of author

By Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட்டில் வினோ மன்கட் செய்து இருக்கும் சாதனைகளுக்காக நினைவு கூறாமல் எதிர்மறையான கருத்து கொண்ட ‘ரன்-அவுட்’டுக்கு அவரது பெயரை பயன்படுத்துவது தவறானதாகும். பந்து வீசும் முன்பு பவுலர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு முன்னேறினால் ரன்-அவுட் செய்யலாம் என்று விதிமுறை உள்ளது. அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் எம்.சி.சி. ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. டான் பிராட்மேன், கவாஸ்கர் போன்ற வீரர்களும் அத்தகைய ‘ரன்-அவுட்’ விதிமுறைப்படி சரியானது தான் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அந்த மாதிரியான ரன்-அவுட் செய்யும் பவுலரை விமர்சிக்கக்கூடாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.