ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!! 

0
224

ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!!

 

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள், பாஸ்மதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – அரை கப், உப்பு, கரம் மசாலா – 2 சிட்டிகை, மஞ்சள் தூள் – சிறிது, சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி, பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, பிரியாணி இலை – தாளிக்க, அரைக்க:, பச்சை மிளகாய் – 2, மல்லித் தழை – ஒரு பெரிய கைப்பிடி, மிளகு – அரை தேக்கரண்டி, சீரகம் – அரை தேக்கரண்டி, முந்திரி – 6, தேங்காய் – 2 விரல் அளவு, பட்டை, லவங்கம்

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம், செய்முறை , அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைக்கவும்.அரிசியை களைந்து ஊற வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.பின் தேங்காய் பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்.நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும்.மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும்.முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.சுவையான கொத்தமல்லி பிரியாணி தயார்.மேலும் இதனை ரைத்தாவுடன் பரிமாறலாம்.

Previous articleதமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!
Next articleகண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!