தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!

0
75

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக உரையாற்றிய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, திருநெல்வேலி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை போன்ற 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்ற ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவ மழை 40 சென்டிமீட்டர் அளவு பதிவாகி இருக்கிறது என்றும், இந்த அளவு கடந்த வருடத்தை விடவும் 88 சதவீதம் அதிகம் எனவும், குறிப்பிட்டுள்ளார்.

இது கடந்த 122 வருடங்களில் மூன்றாவது அதிக சதவீத மழை அளவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த 1906 ஆம் வருடத்தில் 112 சென்டிமீட்டர் மழை பதிவானதாகவும், அதே போல கடந்த 1909ஆம் வருடம் 127 சென்டிமீட்டர் மழையும், அதேபோல நடப்பு 2022 ஆம் வருடத்தில் 93 சென்டிமீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது. கடந்த 113 வருடங்களில் பதிவாகியுள்ள அதிக மழை இது என குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு மற்றும் கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, வடதமிழ்நாடு, போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்.