இந்த தவறுகளை செய்வதால் தான் நாம் இன்னும் மிடில் கிளாஸ் பேமிலியாகவே இருக்கோம்..!
EMI…
மிடிக்கில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்தவர்கள் சமூகத்தில் தங்களை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை மாதத் தவணையில் வாங்குகின்றனர். அந்த பொருள் தங்களுக்கு தேவையான பொருளா? இல்லையா என்று யோசிக்காமல் வாங்குவதால் கடனில் சிக்கி விடுகின்றோம். இதனால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது.
ஷாப்பிங்…
ஒரு பொருளை பார்த்து விட்டால் அதை உடனே வாங்குவது… அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்வது போன்ற விஷயங்களால் சம்பாதிக்கும் பணம் கரைந்து விடுகிறது. இதனால் அவசரத் தேவைக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.
கல்வி செலவு…
பெற்றோர்கள் தங்கள் வருமானத்திற்கு மீறிய கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் பிள்ளைகளை சேர்பதினால் கடனில் சிக்கி விடுகின்றனர்.
லோன்…
கார் லோன், பைக் லோன், பர்ஸ்னல் லோன் என்று எதற்கெடுத்தாலும் லோன் வாங்கி அதை கட்ட முடியாமல் கடனில் சிக்கி விடுவதால் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. கார், பைக் வாங்க வேண்டும் என்றால் பணத்தை சேமித்து மட்டுமே வாங்க வேண்டும்.