ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டி இருந்த இடம் தெரியாமல் கரைய இதை செய்தால் போதும்!!

0
336

ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டி இருந்த இடம் தெரியாமல் கரைய இதை செய்தால் போதும்!!

இயற்கையான முறையில் வீட்டில் இருந்தபடியே உடம்பில் இருக்கக்கூடிய கொழுப்பு கட்டிகளை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை எங்கு பார்ப்போம். கொழுப்பு கட்டி ஆனது உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் தெரிய ஆரம்பிக்கும். கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெறும்போது இந்த கொழுப்பு கட்டிகள் நமக்கு ஏற்படுகிறது. இந்த கொழுப்பு கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் இல்லை புற்றுநோய் கட்டியாகவும் மாறாது எனவே இந்த கொழுப்பு கட்டிக்கு யாரும் பயப்பட தேவையில்லை.

இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடங்களில் தோன்றுகிறது. மரபணுக்கள் உடல் பருமன் அதிகப்படியான கொலஸ்ட்ரால் ஆகிய காரணங்களால் கூட இந்த கொழுப்பு கட்டிகள் ஏற்படலாம். இந்த கொழுப்பு கட்டிகளை சரி செய்வதற்கான ஒரு மருத்துவ குறிப்பை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய்

செய்முறை:
ஒரு பவுலில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறது அப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும்.

அடுத்து ஒரு காட்டன் தவளை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து நன்றாக முடிந்து கொள்ளவும். இப்போது இந்த உப்பு மூட்டையை நாம் செய்து வைத்திருக்க கூடிய எண்ணெயில் நனைத்து பிறகு தோசை கல்லை சூடு படுத்தி அதில் வைத்து மிதமான சூடு வந்த பிறகு இந்த உப்பு மூட்டையை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஒத்தடம் கொடுத்து வர நமக்கே வித்தியாசங்கள் தெரிய ஆரம்பிக்கும். இந்த கொழுப்பு கட்டையை கரைக்கக் கூடிய தன்மை நாம் பயன்படுத்தி இருக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இரண்டுக்கும் உள்ளது.

அதேபோல உப்பு மூட்டையை தோசை கல்லில் சூடு படுத்தும்போது அந்த உப்பு சூடாகி கொழுப்பு கட்டியை கரைக்கக் கூடிய தன்மையை பெறுகிறது.இதுபோல பத்து முறை சூடு படுத்தி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

நம் உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடிய தன்மை மிகுந்து காணப்படுகின்ற ஒரு பழம் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் ஆகும். அதுவும் விதை இருக்கக்கூடிய ஆரஞ்சு பழம்.

எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு கெட்ட நீர் அனைத்தும் வெளியாகும். எனவே கண்டிப்பாக இது இந்த இரண்டு டிப்ஸ்யும் செய்து வந்தாலே கொழுப்பு கட்டியை சுலபமாக நாம் வீட்டிலேயே கரைக்க முடியும்.

Previous articleவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!
Next articleமாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா?? இதை குடித்தால் சரியாகிவிடும்!!