இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

Photo of author

By CineDesk

இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏராளமானோர் மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டி வருகிறார்கள். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகம் செல்லும் நிலைமை ஏற்படுகிறது.

இதற்கு ஒரு தீர்வாகத்தான் கடந்த அதிமுக ஆட்சியில் pos இயந்திரங்களின் பயன்பாடு மின் வாரிய அலுவலகங்களில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்து பணம் செலுத்தலாம்.

இந்த முறை சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர வேறு எந்த பகுதியிலுமே கொண்டு வரப்படவில்லை. தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் இந்த முறை தொடங்கப்பட உள்ளது.

முதலாவதாக கோவையில் இது தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் மின் கட்டணத்தை செலுத்த ஒரு ஸ்வைப்பிங் மெஷின் கொண்டு வரப்படும் என்று கோவை மண்டல மேற்பார்வையாளர் பொறியாளருக்கு,

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துவதற்கு ஸ்வைப்பிங் மெஷின் கொண்டு வருவது குறித்து ஐடி விங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்த ஸ்வைப்பிங் மெஷின் அறிமுகப்டுத்தப்ப்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்துவது சுலபமாகும் என்று கூறப்படுகிறது.