இன்று தொடங்குகிறது இரண்டாம் கட்ட முகாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
114
The second phase of the camp starts today!! Important announcement released by Tamil Nadu Government!!
The second phase of the camp starts today!! Important announcement released by Tamil Nadu Government!!

இன்று தொடங்குகிறது இரண்டாம் கட்ட முகாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றது.

அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த உதவிதொகையின் மூலம் மட்டும் தமிழகத்தில் சுமார் 1 கோடி இல்லத்தரசிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் உதவித்தொகை வழங்க உள்ள திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணபங்கள் வரவேற்கப்பட்டுகின்றது. தற்பொழுது தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு டோக்கன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதற்காக மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உதவித்தொகை பெற விரும்பும் பெண்களுக்கு கட்டயம் 21வயது நிரம்பி இருக்க வேண்டும்.அவர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் விண்ணபங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் இதுவரை முதல் கட்டமாக மட்டும் சுமார் 50 லட்சம் விண்ணபங்கள் பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அந்த முதல் கட்ட முகாம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது.

எனவே இதுவரை மட்டும் சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் விண்ணபித்து உள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம் இன்று தொடங்க உள்ளது. இந்த முகாம் மட்டும் சுமார் 14 ஆயிரம் இடங்களில் நடக்க உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 16 இறுதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த முகாம் அனைத்தும் நிறைவடைந்த பிறகு பொதுமக்களுக்கு செப்டம்பர் 15 ம் தேதி முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.

author avatar
Parthipan K