உலக வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் பேசும்போது கிருமிப்பரவலிலிருந்து உலகப் பொருளியல் மீண்டும் வர எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும் என்று அதிர்ச்சி தகவல் கூறினார்.
கொரோனா கிருமிப்பரவலால் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை ஒருசில நாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் என்ற திருமதி ரெய்ன்ஹார்ட், வசதி குறைந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்றார். அதன் விளைவாக, சமுதாய ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.