செழிப்பான விவசாயம் அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!!
விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000 வழங்கப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகின்றது.இதன் மூலம் பல விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.அந்த வகையில் இனி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் யோஜனா பயனாளிகளிடம் உரையாறிய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த ஆண்டு பாஜக ஆட்சியில் தான் அதிக அளவில் முதலீடு குவிந்துள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் தான் விவசாயிகள் ,தொழிலார்கள் ,பெண்கள் என்று பலர் சலுகை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கரும்பு விவசாயம் உச்சத்தை எட்டியுள்ளது.முந்தைய ஆட்சியில் விவசாயம் என்பது ஒரு நஷ்டமான தொழிலாக இருந்த பட்சத்தில் இந்த ஆட்சியில் செழிப்பான தொழிலாகா மாறி உள்ளது.
இதனை போன்று மாதத்தில் சில நாட்கள் மட்டுமே இயங்கி வந்த கரும்பு ஆலைகள் தற்பொழுது விடுமுறை இன்றி இயக்கப்பட்டு வருகின்ற அளவிற்கு இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகளுக்கு ஏற்றது போல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்றும் அவர் கூறினார்.