அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மழை பெய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்று மாறுபட்டு வீசுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் நகரின் வெப்பநிலை அதிகபட்சமாக 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசும் சூறாவளிக் காற்றானது, மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் நாளை (28.06.2023) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசும் சூறாவளிக் காற்றானது, மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலில் வீசும் சூறாவளிக் காற்றானது, மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அனைவரும் இந்த சூறாவளிக்காற்று வீசும் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.