அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

0
179
#image_title

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இருந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்ந்து வருவதால் சென்னை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி வருகின்றது.

இதையடுத்து தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, சேலம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தை பெறுத்தவரை அடுத்த 48 மணி நேரமும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Previous articleஇந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!
Next articleதவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்!