இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

0
34
#image_title

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக முன்னேறிய குகேஷ் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை செஸ் தொடரில் காலிறுதி போட்டி வரை தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் குகேஷ் முன்னேறினார். இதையடுத்து குகேஷ் அவர்கள் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக மாறினார். மேலும் சர்வதேச அளவில் 8வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் குகேஷ் அவர்களை அழைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊக்கத் தொகை அளித்து பாராட்டியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்திற்கு அழைகப்பட்டு குகேஷ் அவர்களுக்கு 30 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஊக்கத் தொகைய்க வழங்கினார். மேலும் உலகின் 8 செஸ் வீரரும் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராகவும் மாறிய குகேஷ் அவர்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்தியாவின் நம்பர் 1 வீரர் குகேஷ் அவர்கள் “முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் எனக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார். மேலும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நட்புடன் பேசினார். நான் இப்பொழுது சதுரங்க போட்டியில் நன்றாக பிரபலம் அடைந்துள்ளேன். அரசு தற்பொழுது எனக்கு அளித்த ஊக்கத்தைப் போலவே தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கும் அளிக்ங வேண்டும். அளித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.