அரசியலுக்கு புதிதாக அறிமுகமாகும் பிரபல நடிகர்!! அவரே கூறிய பதில்!!

Photo of author

By Jayachithra

அரசியலுக்கு புதிதாக அறிமுகமாகும் பிரபல நடிகர்!! அவரே கூறிய பதில்!!

Jayachithra

நடிகர் ஜாக்கி சான் அதிரடி சண்டை மற்றும் தன்னுடைய சாகச திறமையை உலக அளவில் வெளிப்படுத்தி பிரபலம் அடைந்தார். இவர் சீன நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். சீன அரசு, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைத்தியது.

மேலும், இதனை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் சீனாவுக்கு ஆதரவாக, நடிகர் ஜாக்கி சான் அவர்கள் கடந்த ஆண்டு தனது கருத்தினை தெரிவித்தார். இதன் காரணமாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன.

இந்த நிலையில், சீனத்திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக பதவியில் இருந்த ஜாக்கி சான் அவர்கள், நேற்று பீஜிங்கில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், அவர் அப்போது பேசியதாவது, ‘சில ஆண்டுகளில் சீனா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. இதனை பல நாடுகளுக்குச் செல்லும் நான் நேரடியாக உணர்ந்துள்ளேன்.மேலும், சீன குடிமகனாக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.

நம்முடைய சிவப்புக் கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை இருக்கிறது என்று அவர் கூறினார். மேலும், சீன கம்யூனிஸ்ட்டானது தனது வாக்குறுதிகளை மிக குறுகிய காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக இணைய நான் மிக ஆர்வமாக உள்ளேன்” என்று அவர் கூறினார்.