அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!

0
236
Jackpot for government employees!! Increase in cost price again.. Do you know how much!!
Jackpot for government employees!! Increase in cost price again.. Do you know how much!!

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!

பல நாட்களாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தும்படி தமிழக அரசிடம் கேட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கையை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் இருந்தது.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.அந்தவகையில் பலமுறை தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு அறிவிப்பையும்  வெளியிடவில்லை.

பல கோரிக்கைகளை கடந்து தமிழக அரசானது 38% சதவீதம் இருந்த அகவிலைப்படியை தற்பொழுது 42% சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டது.இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.இதனால் கிட்டத்தட்ட 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

அதேபோல மத்திய அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பானது வருடத்திற்கு இரண்டு முறை வெளியிடப்படும்.அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்பொழுது வரை அதன் இரண்டாவது அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.அதுமட்டுமின்றி இந்த வருடத்தின் முதல் அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் என அறிவிப்பை வெளியிட்டனர்.

நாட்டின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவையை மையமாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வானது நிர்ணயிக்கப்படும்.தற்பொழுது பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பதால் மத்திய அரசானது எந்த ஒரு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயரும் என என்னி வருகின்றனர்.

அவ்வாறு உயர்த்தப்பட்டால் 42% யிலிருந்து 45% ஆக  உயரும் என கூறுகின்றனர்.இதனால் மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகளவில் பயன்பெறுவர்.கூடிய விரைவில் மத்திய அரசானது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 
Next articleசற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!!