சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!!  

Date:

Share post:

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!!

அதிமுக மற்றும் பாமக இடையே சிறு விரிசல் உண்டாகியுள்ளது என்பது அன்புமணியின் பேச்சை வைத்து தெரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு கூட நீங்கள் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது, யாருடன் கூட்டணி என்று தற்பொழுது சொல்ல முடியாது, ஆனால் பாமக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என சூசகமாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பாமகவின் சில நிலைப்பாடுகளும் திமுகவிற்கு ஆதரவாக இருப்பது போல இருந்தது. சட்டப்பேரவையில் கலைஞரின் புகைப்படம் திறப்பு விழாவின் போது கூட அதிமுகவை சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் பாமகவின் உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை. திமுகவுடன் கூட்டணி சேர போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லாவிட்டாலும் பாமகவின் பல்வேறு நடவடிக்கைகள் சமீப காலமாக அப்படித்தான் இருந்தது.

ஆனால் மற்றொருபுறம் அதிமுகவிடம் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அதிக அளவு தொகுதிகளை கேட்கவே இவ்வாறான நிலைப்பாட்டை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர். தற்பொழுது ஏழு தொகுதிகளை வழங்கி வரும் நிலையில் அதனை பத்தாக வழங்க வேண்டும் என்பதற்காக பாமக செய்யும் மற்றொரு யுத்தி தான் இது எனவும் கூறுகின்றனர்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்பொழுது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினுடன் இருந்தாலும் சரி அல்லது தனியாக களம் இறங்கினாலும் சரி கடலூர் மாவட்டத்தில் பாமக தனது தடத்தை பதிக்கப்போவதாக கூறுகின்றனர். என்எல்சி நிறுவனம் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து மற்ற கட்சிகளை காட்டிலும் பாமக குரல் மட்டும் ஓங்கியுள்ளது. இவை அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாமக வின்  போடும் முதல் அஸ்திவாரம்.

கடலூரில் தற்பொழுதே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒரு கொலை வழக்கில் சிக்கி நிலையில் தற்பொழுது மௌனம் காத்து வருகிறார். இவரது இந்த செயலால் திமுக கட்சி ஆனது பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்கு தள்ளப்பட்டது. இதனால் இவரை மீண்டும் கடலூர் மாவட்ட தொகுதியில் நிற்கவைக்க வாய்ப்பு இல்லை என கூறி வருகின்றனர்.

இவருக்கு மாறாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவனை நிற்க வைக்கலாம் என கூறுகின்றனர். அந்த வகையில் இவரை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தனது உறுப்பினர்கள் ஒருவரை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வாறு திமுகவை எதிர்த்து பாமக தனது வேட்பாளரை நிற்க வைத்தால் கட்டாயம் இவர்களுடன் கூட்டணி இருக்காது என்பதுபோல் தெரிகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது அதிமுக உடனான கூட்டணி உறுதி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதேபோல அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் அவரது மகனை எதிர்க்க ஒரு வேட்பாளரும், அதே போல தர்மபுரி மாவட்டத்தில் அவரது தந்தையை எதிர்க்க இவரே போட்டியிட உள்ளதாகவும்  கூறுகின்றனர்.அனைத்து பக்கமும் திமுகவை டார்கெட் செய்து அணைக்கட்ட முயற்சிக்கிறது.ஏதேனும் ஒரு இடத்தை கட்டாயம் கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...