Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
News

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! நாளை வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!!

Published On: 26 ஜூலை 2023, 12:04 மணி | By Parthipan K
Jackpot hit for farmers!! 2000 rupees deposit in bank account tomorrow!!

விவசாயிகளுக்கு அடித்த  ஜாக்பாட்!! நாளை வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!!

நாட்டின் முதுகெலும்புகளாக உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000  வழங்கப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகின்றது.இதன் மூலம் பல விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இனி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி  யோஜனா திட்டத்தில் பயனடைந்து வரும் விவசாயிகள்  மத்திய அரசின் ஸ்கீமில் திட்டத்தில் இணையாமல் உள்ளார்கள்.

எனவே மத்திய அரசனது இந்த தொகையை இரட்டிப்பாக உயர்த்தவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை இரட்டிப்பு செய்யப்பட்டால் இனி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுதோறும் ரூ. 12000 வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி  யோஜனா திட்டத்தில் மூலம் தவணை முறையில் ரூ 2000  வழங்கப்படும். அந்த வகையில் 13 தவணை வழங்கப்பட நிலையில் 14 வது தவணை வருகின்ற ஜூலை 27 ம் தேதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

© 2025 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress