பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!

0
176
#image_title

பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!! 

இந்தியாவில் கர்நாடகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் பெங்களூருக்கும் தார்வாட்டுக்கும்  இடையே ஜூன் 27ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது.
இது பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

நாட்டிலேயே அதிக வேகமாக இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க போவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழ்நிலையில் முழுக்க முழுக்க உள் நாட்டு தொழில்நுட்பத்தில் ரயில் 18 என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே கடந்த 2018 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த ரயிலானது வேகமாக செல்வதால் பயணிகளின் முதல் தேர்வாக மாறி உள்ளது.

பின்னர் 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. முதலில் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி வாரணாசி இடையே பிப்ரவரி 15ஆம் தேதி முதலில் இயக்கப்பட்டது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் வந்தே பாரத் ரெயிலை தயாரித்து வருகிறது. இதுவரை 25 ரயில்களை தயாரித்த ஐசிஎப் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்பொழுது 18 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் புதிதாக ஐந்து வந்தே பரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் ஜூன் 27ஆம் தேதி 5 வந்தே பாரத் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஜூன் 27ஆம் தேதி கர்நாடகாவில் பெங்களூருக்கும் தார்வாட்டிற்கும் இடையே ரயில் சேவை துவக்கி வைக்கப்பட இருக்கிறது. இதே நாளில் மத்திய பிரதேசத்தில் இரண்டு ரயில்களும் மும்பை மற்றும் பாட்னாவில் தலா ஒரு ரயில் என மொத்தம் ஐந்து ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Previous articleநீங்கள் இறப்பதற்கு முன் கட்டாயம் google account ல் செய்யவேண்டிய மாற்றங்கள்!!
Next articleஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!