வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

Photo of author

By Vijay

வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

Vijay

வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.

உணவு ஏற்றுமதி பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தனர்.

இந்த போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.தொடர்ந்து கடந்த மார்ச் 9-ம் தேதி டெல்லியில் வைத்து அவரை என்சிபி போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர்.

மேலும், சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவரின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அவரது நண்பரும், தமிழ்திரைப்பட இயக்குநருமான அமீரிடமும் என்சிபி போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ஜாபர் சாதிக், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துது.

அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம், ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

அமலாக்கத்துறையின் விசாணைக்கு பின் தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் புள்ளிகள் மற்றும் முக்கிய திரை பிரபலங்கள் சிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.