ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்!
பொங்கல் பண்டிகையன்று அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நாளை நடைபெறும் என விழா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை எந்த ஒரு அனுமதி மற்றும் உத்தரவும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை.கடந்த இரண்டு நாட்களாக தச்சங்குறிச்சி பகுதியில் காளைகளின் உரிமையாளர்களும்,மாடுபிடி வீரர்களும் அனுமதி சீட்டு பெறுவதற்காக முகாமிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவுற்ற நிலையில் அதற்கான அனுமதி வரவில்லை.மேலும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் ஜல்லிக்கட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்டால் அனைவருக்கும் இருக்கும் குழப்பம் தீரும் என கூறுகின்றனர்.மேலும் காளைகளின் உரிமையாளர்,மாடுபிடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.