Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0
75
RSS team allowed to conduct classes!! Action order of the High Court to the Government of Tamil Nadu!
RSS team allowed to conduct classes!! Action order of the High Court to the Government of Tamil Nadu!

Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பானது பூதகரமாக வெடித்து வரும் நிலையில் காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் தமிழகத்தில் அணிவகுப்பு நடத்துவோம் என்று உயர் நீதிமன்றம் வழியாக மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொண்டது.

ஆனால் அவ்வாறு அணிவகுப்பு நடந்தால் சமூக ரீதியான பிரச்சனை உண்டாகும் என எண்ணி தமிழக அரசும் காவல்துறையும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர்.

அதுமட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனும் மத நல்லிணக்கம் என்ற ஊர்வலத்தை ஆர் எஸ் எஸ் நடத்தும் அணிவகுப்பு அன்றே நடத்துவதாக தெரிவித்தார்.

ஆனால் தமிழக காவல்துறை இரண்டு அணிவகுப்பிற்கும் மறுப்பு தெரிவித்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் 44 இடங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் தமிழக அரசு மற்றும் காவல்துறையானது மூன்று இடங்களில் மட்டுமே அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்ததோடு மற்ற இடங்களில் சுற்றுச்சூழல் அதாவது மைதானம் போன்ற அரங்கிற்குள்ளேயே தான் அணிவகுப்பு நடக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை விடுத்தது.

மீண்டும் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பானது உயர் நீதிமன்றத்தில் பொதுவெளியில்தான் நடத்துவோம் எனக் கூறி மேல்முறையீடு வழக்கு தொடுத்தது. அந்த வகையில் இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது.

தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அர்.எஸ்.எஸ் அமைப்பானது கேட்டுள்ளதை அடுத்து காவல்துறை தற்பொழுதும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே அனைத்து அணி வகுப்பு போராட்டங்களுக்கும் இந்த முறையை தான் காவல்துறை மற்றும் தமிழக அரசு பின்பற்றுகிறதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு சுற்றுச்சுவருக்குள் நடத்துவது குறித்து தமிழக அரசு மற்றும் காவல்துறை வரும் 19 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.