ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்!
ஒரு மாதத்தில் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழா என்றாலே தமிழர்கள் காலகாலமாக கொண்டாடும் ஜல்லிக்கட்டு தான் நமக்கு பெருமையை தேடித் தரும். அந்த வகையில் காளை மாடுகளை துன்புறுத்துவதாகவும் அதனால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு யாரோட ஆதரவும் இன்றி மெரினாவில் போராடினர். தற்பொழுது பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், மீண்டும் பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு நடக்க கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தனது பக்க வாதங்களை கூறினார்.
அதில், ஜல்லிக்கட்டு என்பது அந்தந்த ஊர்களில் வளர்க்கப்படும் மாடுகளின் இனத்தின் வீரத்தை வெளிப்படுத்தும் ஓர் போட்டி. பீட்டா அமைப்பு இது பொழுதுபோக்காக நடத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து. ஜல்லிக்கட்டின் ஒரு சில பகுதிகள் மட்டும் தான் பொழுது போக்கிற்காக நடத்தப்படுகிறது.
அதேபோல போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மாடுகள் மற்றும் மாடுகளை பிடிக்கும் வீரர்கள் அனைவருக்கும் உரிய பரிசோதனை எடுக்கப்படும். அவ்வாறு பரிசோதனை எடுக்கப்பட்டு தகுதி சான்றிதழும் வழங்கப்படும். தகுதி சான்றிதழ் இருந்தால் மட்டுமே வீரர்கள் மட்டும் மாடுகள் களத்தில் இறங்க அனுமதி வழங்கப்படும். இந்த போட்டிக்கு என்று விதிமுறைகள் உள்ளது அதனை பின்பற்றியே போட்டி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜல்லிக்கட்டு மாடுகளை ஒருபோதும் துன்புறுத்தப்படுவதில்லை. பீட்டா அமைப்பு கூறும் கருத்துக்கள் மிகவும் தவறானது. இவ்வாறு கூறியவர் இறுதியில், நீதிமன்றத்தையே அசர வைக்கும் வகையில் நீதிபதிகளுக்கு ஓர் அழைப்பு விடுத்தார். அதில், வரும் ஆண்டு நடைபெற போகும் ஜல்லிக்கட்டில் கட்டாயம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவித்தார்.