தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!

Photo of author

By Sakthi

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணிமண்டபத்தை ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினா கடற்கரைக்குச் சென்று மணிமண்டப பணிகளை மேற்பார்வை செய்திருக்கிறார்.

முதலமைச்சர் டெல்லி சென்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்கு மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் மெரினா கடற்கரையில் 50 ஆயிரத்து 422 சதுர அடியில் 50.80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவை போல கட்டமைக்கப்பட்டு இருக்கின்ற மணிமண்டபத்தை எதிர்வரும் 27 ஆம் தேதி திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் அவருடைய மணிமண்டபம் திறப்பு விழா சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டு இருந்தாலும் அந்த அழைப்பை அவர்கள் தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், டெல்லி சென்று இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பயணம் முடிந்து சென்னை வந்தவுடனேயே ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்வரும் 27 ஆம் தேதி திறந்து வைக்க இருக்கிறார்கள்.

சசிகலா விடுதலை செய்யப்படுவது வரும் 27ஆம் தேதி தான் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர் விடுதலை ஆனால் அவரை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உடன் ஆளும் கட்சியினரும் சென்று விடக்கூடும் என்ற யூகத்தில் அன்றைய தினம் அனைத்து ஊடகங்கள், மற்றும் செய்தித்தாள்களிலும் சசிகலா செய்திதான் பரபரப்பாக இருக்கும். இதையெல்லாம் தவிர்ப்பதற்காக தான் சசிகலா விடுதலை செய்யப்படும் அன்றைய தினமே ஜெயலலிதாவின் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அதிமுகவை சார்ந்தவர்கள்.