உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

Photo of author

By Gayathri

உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

Gayathri

Updated on:

உதவி செய்த ஜெயலலிதா… வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் நடிகர் ராமராஜனை 1987ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். தற்போது நளினி சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

காமராஜனை திருமணம் செய்த நளினி திருமணமான சில வருடங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இதயைடுத்து, ராமராஜன் அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாக மாறினார்.

அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அவருக்கு ராமராஜன் மிகவும் விசுவாசமாக இருந்து வந்தார். ஜெயலலிதாவிற்கும் அவர் மேல் தனி பாசம் உண்டு.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகை நளினி பேட்டி கொடுத்தார். அதில், பல விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், நாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் எங்களுக்கு உதவி செய்தது ஜெயலலிதா அம்மாதான். அவர்தான் செலவு செய்து என் கணவரை ஜெயிக்க வைத்தார். நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன். ஆனாலும் ஜெயலலிதா அம்மா தான் என் இரு பிள்ளைகளையும் படிக்க வைத்தார்கள். ஆனால், அதை நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். ஏன் என்றால் என் குழந்தைகளுக்கு  கஷ்டம் என்னவென்று தெரிய வேண்டும் அதற்காகத்தான்.

தனியாக நின்று யாரின் உதவியும் இல்லாமல்  என் குழந்தைகளை கரை சேர்த்து விட்டேன் என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.