ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

Photo of author

By Parthipan K

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் , ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதம் நடக்கவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள், ஊரடங்கு காரணமாக நடத்த இயலாமல் போனது .இதனை நடத்தும் முடிவில் மத்திய அரசும் தேர்வு முகாமையும் முடிவெடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்தது.

அதில் நடந்த ஜே.இ.இ தேர்வு ,செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. இன்று ஜே.இ.இ தேர்வு மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

jeeadv.ac.in என்ற இணையதள முகவரியில் மூலம் உங்களது தேர்வு மதிப்பெண்களை அறிய இயலும்.