ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

0
58

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே சேவையானது சரியாக இயக்கப்படவில்லை. தற்பொழுது மத்திய,மாநில அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் , ரயில்களும் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் ரயில் நிலையத்தில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் திறக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் தீபாவளி , தசரா, கிறிஸ்மஸ், பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதினால் பயணிகள் சேவையை அதிக அளவில் இருப்பதினால் அவற்றை சமாளிக்கும் வகையில் உணவகங்கள் பார்சல் முறையில் விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.

பயணிகளின் தேவைகளை சமாளிக்கும் வகையில் உணவு தேவைகளை ரயில்வே நிர்வாகம் ,கேன்டீன், புட் பிளாசா, ஜன் அஹர்ஸ்,செல் கிட்சென் மற்றும் பயணிகள் ஓய்வறை சமைக்கப்பட்ட உணவுகளை பார்சல் முறையில் விற்பனை செய்ய ரயில் நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K