ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

Photo of author

By CineDesk

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடிக்கும் மேலான வருவாயை கணக்கில் காட்டாததும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஒரு வாரமாக சுமார் 130 அதிகாரிகள் ஜேப்பியார் குழுமங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த பல வருடங்களாக வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றது ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேப்பியார் குழுமங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் வாங்கிய கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சோதனை செய்ததில் மிகப்பெரிய வரி ஏய்ப்பு நடந்தது தெரிய வந்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படும் ஜேப்பியார், கடந்த 1988ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார். பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றையும் உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை ஜேப்பியார் நிறுவினர் என்பதும் கடந்ஹ 2016ஆம் ஆண்டு ஜேப்பியார் மறைவிற்கு பின் இந்த கல்வி நிறுவனங்களை அவரது வாரிசுகள் தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது