சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் நடந்த முடிந்த சட்டத்தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆட்சியமைத்த பிறகு, 110 சட்டத்தின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
பதவியேற்று 6 மாதங்கள் நெருங்கும் நிலையில் மக்களிடையே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? செய்யப்படுமானால் எப்போது என பல கேள்விகள் எழுந்துள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீது பல மோசடிகள் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி கூறுகையில் நகைக்கடனில் 120 கோடிக்கும் மேலாக மோசடி நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
மேலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்து இன்னும் 1 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறினார்.