முதல்வருக்கு நன்றி சொன்ன எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! எதற்காக தெரியுமா?

0
80

சமீபத்தில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். அதாவது உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலையை அதிமுக சார்பாக பராமரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் ஓபிஎஸ்.

இதற்கு பதில் தெரிவித்த தமிழக தொழில் துறை அமைச்சர் பொன்முடி அரசியல் கட்சி தலைவர்களின் சிலை எப்போதும் அரசாங்கத்தால் முறையாக பராமரிக்கப்படுவது தான் வழக்கம் .அந்த சிலைகளை பராமரிப்பதற்காக தனியாரிடம் ஒப்படைக்கும் நடைமுறை இதுவரையில் தமிழகத்தில் இல்லை. ஆகவே ஜெயலலிதாவின் சிலை நல்லமுறையில் அரசால் பராமரிக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதோடு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்களின் திருவுருவச்சிலை அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதனால் அவற்றை தனிநபரின் பராமரிப்பு என்ற விதத்தில் தனியாக ஒதுக்கிவிட இயலாது. ஆகவே அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலையை முறையாக பராமரிக்கும் என்றும், எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைக்கும் சாதாரண நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நடைமுறை இதுவரையில் பின்பற்றப்பட்டது கிடையாது. ஆகவே அவர்களுடைய பிறந்த நாள் விழா மற்றும் சுதந்திரதின விழா உள்ளிட்ட தினங்களில் அவர்களின் சிலைகளுக்கு முறையாக மரியாதை செய்யப்படும் என்று தெரிவித்ததோடு ஜெயலலிதாவின் திருவுருவ சிலையை முறையாக நிச்சயமாக திமுக அரசு பராமரிக்கும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், சென்னை உயர் கல்வி மன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை சரியாக பராமரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியதற்கு உடனடியாக உயர்கல்வித்துறை அமைச்சர் மூலமாக பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என ஓபிஎஸ் கூறியிருக்கிறார.

இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, ஜெயலலிதா சிலையும் அந்த சிலை அமைந்திருக்கக் கூடிய வளாகமும் பராமரிக்கப்பட வேண்டும் என நான் கோரிக்கை வைத்ததற்கு பதிலளிக்கும் விதத்தில் அரசின் சார்பாக சிலை மற்றும் நினைவகங்கள் எல்லாம் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது எனவும், ஜெயலலிதாவின் திருஉருவ சிலை அரசின் சார்பாக தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியளித்திருக்கிறார்.

என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சென்னை காமராஜர் சாலை மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் எடுக்கக்கூடிய ஜெயலலிதாவின் முழு திரு உருவ சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர் கல்வித்துறை அமைச்சரின் மூலமாக தெரிவித்த தமிழக முதலமைச்சருக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து இருக்கிறார்.