இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! சோதனையில் சிக்கியது என்ன?

0
69

கோயம்புத்தூர் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் தமிழக கூட்டுறவு வங்கி தலைவராக இருந்து வருகிறார் அதோடு அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும், இருக்கிறார்.

இவர் பொறுப்பிலிருந்த சமயத்தில் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் என்று இருந்த இவருடைய சொத்து மதிப்பு தற்சமயம் தாறுமாறாக எகிறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் அவ்வபோது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மாநில அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது என்று அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவராக இருக்கும் இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன் உள்ளிட்டோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையை சேர்ந்தவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரிவித்து வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவருக்கு சொந்தமாக இருக்கும் ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய புத்திர கவுண்டம்பாளையத்தில் இருக்கக்கூடிய அவருடைய இல்லம் மற்றும் அதை தவிர்த்து இருபத்தி ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்றையதினம் சோதனை நடத்தியது. சேலம், சென்னை, திருச்சி, உட்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சூழ்நிலையில், இளங்கோவன் வீட்டிலிருந்து 21.2 கிலோ தங்கம் மற்றும் 282 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு 29.7 7 லட்சம் பணம் மற்றும் 10 சொகுசு கார்கள், இரண்டு வால்வோ சொகுசு கார்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு 3 கணினி ஹார்ட் டிஸ்க்குகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.