முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!

Sakthi

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதோடு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விழுப்புரத்தில் இருக்கின்ற பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சியின் மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார்.

இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவே தற்போதைய திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இந்த பல்கலைக் கழகத்தை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிமுக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகிறது. அதோடு விழுப்புரத்தில் அமைய இருக்கின்ற ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்க கோரியும் ,பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரை நியமிப்பதற்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் சற்று முன்பு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடம் முதுநிலை படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாமலை பல்கலைக்கழகம் கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் விதத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் சட்டத்தை இரத்து செய்யவும், முடிவு செய்து இருப்பதாக தெரிவித்து அது குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும், தாக்கல் செய்தார்.

அந்த சமயத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போதைய நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் சட்டம் அமலில் இருக்கிறது. அதனை பின்பற்ற வேண்டும் என்றும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், வாதம் செய்தார்.இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனாலும் அதனை ரத்து செய்யப்படும் வரையில் தற்போது அமலில் இருக்கும் சட்டம் இருப்பதால் அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

அதன் அடிப்படையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிட அதிகாரம் கிடையாது என்று தெரிவித்து அந்த அறிவிப்பை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். அதோடு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தும், இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.இதை தவிர்த்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆட்சி என்பது ஒரு சுழற்சி முறையில் நடைபெறக் கூடியது. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை அப்படியே அடுத்துவரும் ஆட்சி பின்பற்ற வேண்டும் என தற்போதைய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை தெரிவித்திருக்கிறார்கள்.