தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

Photo of author

By Vinoth

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

இங்கிலாந்து அணிக்காக தான் தலைமையேற்ற முதல் டி 20 உலகக்கோப்பை தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்துள்ளார் ஜோஸ் பட்லர்.

அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் அதிகமாகக் கொண்ட இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் சிறப்பாக வழிநடத்தினார்.

இயான் மோர்கன் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பட்லர் பொறுப்பேற்று 6 மாதங்கள்தான் ஆகின்றன. பட்லர் கேப்டன் பொறுப்பேற்கும் முதல் ஐசிசி தொடர். முதல் தொடரிலேயே கோப்பையை வென்றுள்ளார். இதற்கு முன்னால் தோனி, 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையின் போது கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரிலேயே கோப்பையை வென்றிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தோனிக்கும் பட்லருக்கும் மற்றொரு ஒற்றுமை ,இருவருமே விக்கெட் கீப்பர்கள். இவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் டி 20 உலகக்கோப்பையை வென்றதில்லை.

சிறப்பாக அணியை வழிநடத்தி, பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை பெற்ற பட்லர், ஐசிசி அறிவித்த சிறந்த அணிக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பையின் சிறந்த அணி

ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பில்ப்ஸ், சிக்கந்தர் ராசா, ஷதாப் கான், அண்ட்ரு நோர்ட்யே, மார்க் வுட், ஷாகின் அப்ரிடி, அர்ஷ்திப் சிங்