தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்! 

0
368
#image_title

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்! 

தமிழகத்தில் பிற மாநிலங்களின் கழிவுகளை கொட்டுவதை  முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹை கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த சிதம்பரம் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவின் மீதான விசாரணை இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் தென்காசியில் 9 வழக்குகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு உள்ளது. கேரள எல்லையோர  உள்ள மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இதை எடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிற மாநில மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

 

Previous articleதமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்! 
Next articleநீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!