தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்! 

0
188
#image_title

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்! 

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் கொல்லப்பட்டதால் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

சேலம் மாவட்டம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் அடிப்பாலாறு ஓடுகிறது.  பாலாறு காவிரி ஆற்றுடன் இணையும் இந்த பகுதி தமிழக கர்நாடக எல்லைப் பகுதியாகும். இங்கு கடந்த 14ஆம் தேதி கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா வயது 45, செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) ஆகிய மீனவர்கள் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மூவரையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் ரவி மற்றும் இளையபெருமாள் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட ராஜா மற்றும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார். இது பற்றி கிராம மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது துப்பாக்கிச் சூடு நடந்தது உண்மை எனவும், மூவர் மயமாகியுள்ளதும் தெரிய வந்தது. அவர்களின் வீடுகளுக்கு சென்று பார்த்த போது பூட்டப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட வனத்துறை சரணாலய பகுதியாகும்.  இவர்கள் 3 பேரும் அங்கு மான் வேட்டையாட வந்த போது கர்நாடக வனத்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கர்நாடக வனத்துறை தெரிவித்தது.

மேலும் அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, 2 மூட்டை மாநில இறைச்சி,  பரிசலையும் கைப்பற்றியதாக கர்நாடக  வனத்துறை தெரிவித்தது. மேலும் பெங்களூரில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட சம்பவம் நடந்த இடத்தில் மாதிரிகள், சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அடிப்பாலாறு பகுதியில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்ததாக கருதப்பட்டது. இவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தமிழக கர்நாடக எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்குள்ள சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.