டெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!

0
129

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் அதோடு தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், ஜூன் மாதம் ஆறாம் தேதி மற்றும் ஜூன் மாதம் 7ஆம் தேதி போன்ற நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள்,கடலோர மாவட்டங்கள் காரைக்கால், புதுச்சேரி போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாக இருக்கும் அதே போல குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleசுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி! மகிழ்ச்சியில் மக்கள்!
Next articleதொடரும் ஊரடங்கு! எந்தெந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?