தமிழகத்தின் முக்கிய பகுதியில் காலியான அதிமுக கூடாரம்! அதிர்ச்சியில் தலைமை!

Photo of author

By Sakthi

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த பலர் அந்த கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இனைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததில் இருந்தே அந்த கட்சியில் இருந்து பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலாவிடம் உரையாடும் அதிமுகவைச் சார்ந்தவர்களை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது.

இதுதொடர்பாக அந்த கட்சியில் இருப்பவர்கள் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தற்போது அந்த கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருவதாக சொல்லப்படுகிறது.. ஆனாலும் அந்த கட்சியின் தலைமை மனம் தளராமல் தன்னுடைய வேலைகளை செய்து வருகிறது.அதாவது 1987 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் உயிரிழந்ததை தொடர்ந்து இனி அதிமுக என்ற கட்சியே இல்லை என்ற நிலை உருவானது.கட்சி பிளவுபட்டு கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து அதோடு அடுத்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது அந்த கட்சி.

அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒன்றுதிரண்ட அதிமுக 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரையில் வீர நடை போட்டு வந்தது. இந்தநிலையில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அதன்பிறகு அதிமுகவில் எண்ணற்ற பிரச்சனைகள் எழுந்தது.

இதுவரையில் ஜெயலலிதா இருந்தார் அனைத்தையும் பார்த்துக் கொண்டார் இனி எதுவும் நடக்கப் போவதில்லை அதிமுக என்ற கட்சியை இனி தமிழகத்தில் கிடையாது என்று எண்ணிவர்களும் உண்டு ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட அதிமுகவின் தலைமையின் காரணமாக தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கிறது. அதாவது அதிமுகவிடம் இருந்து முதல்வர் பதவியை தட்டிப்பறித்த திமுக அதிமுகவிடம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஒன்றும் வெற்றி பெறவில்லை ஒவ்வொரு தொகுதியிலும் 100 வாக்குகள் 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் 5,6 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கின்ற கழகத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த மாநில வர்த்தக அணி செயலாளரும் ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளருமான தமிழ்நாடு சிறுதொழில் வாரிய முன்னாள் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு புறநகர்மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கே ஆர் கந்தசாமி, ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே எம் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் தெற்குதெரு ஒன்றிய செயலாளர் சக்தி வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு சங்கத் தலைவருமான வீசி வரதராஜ், கோபிசெட்டிபாளையம் நகர செயலாளரும் கோபி வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு சங்க தலைவருமான பிகே காளியப்பன், ஈரோடு மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் பவானி நகர் மன்ற முன்னாள் தலைவருமான எம்ஆர்ஐ ஈரோடு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர் செந்தில் குமரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளருமான பி முத்துலட்சுமி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவானிசாகர் ஒன்றிய துணைச் செயலாளருமான எம் தங்கராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மோகனசுந்தரம், ஈரோடு புறநகர் மாவட்ட இளைஞ்சர் அணி செயலாளர் வாசு தண்டபாணி, ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பி மகேஸ்வரன், ஈரோடு புறநகர் மாவட்ட ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் மார்டன் பி மகேஷ்வரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு திமுகவில் இணைந்தனர்.

அப்போது உரையாற்றிய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதன்மை செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் பி முத்துசாமி ,ஈரோடு மாவட்ட செயலாளரின் நல்லசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்திருக்கிறார்கள்.