சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலையும்! தலையில் அடித்துக்கொண்ட வாகன ஓட்டிகளும்!

0
91

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நினைக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாதம் ஒருமுறை நியமிக்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீபகாலமாக நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைப்பிடித்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்து இதை தொடர்ந்து நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருப்பதாக தெரிகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 19 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து 93 ரூபாய் 23 காசுக்கும், விற்பனையாகி வருகிறது.