வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!!

0
105

வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!!

பல்வேறு பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் முகக்கருமை ஆகும். தினமும் வெயிலில் செல்வதாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் சருமத்தில் ஏராளமான தூசுகள் படிவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் முகப்பருக்கள் அதனால் ஏற்படக்கூடிய தழும்புகள் அந்த இடத்தில் கருமையாக மாறுவது என்று முகமே ஒரு பொலிவு இல்லாமல் காணப்படுகிறது. எனவே இதை அனைத்தையும் சரி செய்து வெறும் இருபதே நிமிடங்களில் முகத்தை வெண்மையாக்க ஒரு இயற்கையான டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கற்றாழை
தக்காளி
தயிர்

இந்த கற்றாழையில் 72 ககும் மேற்பட்ட நன்மை தரக்கூடிய சத்துக்கள் மிகுந்து இருக்கிறது. இந்த கற்றாழையை முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் சோர்வு இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக காணப்படுவோம்.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது முகத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்கள் மற்றும் கருந்திட்டுக்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே இந்த தக்காளியானது முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றி முகத்தை வெண்மையாக உதவுகிறது.

தயிரானது முகத்திற்கு நல்ல ஒரு பிரஷ்ஷான தோற்றத்தை அளிக்க உதவுகிறது. தயிர் முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை சரி செய்து எப்போதும் இளமையாக காட்சியளிக்க உதவும். மேலும் முகத்திற்கு ஒரு பொலிவையும் வழங்க கூடியது.

செய்முறை:
கற்றாழை ஜூஸில் இரண்டு ஸ்பூன் தக்காளி ஜூஸ் இரண்டு ஸ்பூன் மற்றும் தயிர் ஒரு ஸ்பூன் மூன்றையும் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கலந்து கொள்ளவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை இரண்டு அல்லது மூன்று முறை காயவைத்து காயவைத்து அப்ளை செய்ய வேண்டும்.

இவ்வாறு முகத்தில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு நன்றாக காய விட வேண்டும். பிறகு காய்ந்த பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு முகத்தில் நன்கு மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டங்கள் சீராக இருக்கும் இதனால் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

இவ்வாறு செய்வதனால் முகம் நன்கு பொலிவுடன் வெள்ளையாக மாறி மேலும் கண்களுக்கு அடியில் இருக்கக்கூடிய கருவளையம் வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமை மற்றும் முகப்பருக்கள் அதனால் ஏற்படும் தழும்புகள் கருந்துட்டுக்கள் என அனைத்தும் மறைந்து முகம் அழகாக காட்சியளிக்கும்.

பணத்தை செலவு செய்து பியூட்டி பார்லர் போய் அழகு படுத்திக் கொள்வதற்கு பதிலாக இவ்வாறு இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் இதுபோல் செய்து உபயோகப்படுத்தி வர நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்.

Previous articleசர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!!
Next articleசெறியாமை குடற்புண்கள் உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்!!