மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!!

0
38
#image_title

மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!!

நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் சிக்கன் மற்றும் மட்டனுக்கு சேர்க்கப்படும் தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

*கொத்தமல்லி விதை – 1/4 கப்

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 10

*பட்டை – 4 துண்டு

*இலவங்கம் – 10 முதல் 15

*அன்னாசி மொக்கு – 1

*பிரியாணி இலை – 3

*கல்பாசி – 1 தேக்கரண்டி

*ஏலக்காய் – 4

*புழுங்கல் அரிசி -1 தேக்கரண்டி

*கசகசா – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை:-

அடுப்பில் கடாய் வைத்து அதில் 1/4 கப் கொத்தமல்லி விதை,1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1 தேக்கரண்டி கருப்பு மிளகு,1 தேக்கரண்டி சீரகம் மற்றும் 10 வரமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.

அடுத்து 4 துண்டு பட்டை,10 முதல் 15 இலவங்கம்(கிராம்பு),1 அன்னாசி மொக்கு,பிரியாணி இலை 3,1 தேக்கரண்டி கல்பாசி,1 தேக்கரண்டி கசகசா,ஏலக்காய் 4 மற்றும் கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.இதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கொள்ளவும்.

அடுத்து புழுங்கல் அரசி 1 தேக்கரண்டி சேர்த்து வறுத்து கொள்ளவும்.இதையும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து நன்கு ஆறவைக்கவும்.

பின்னர் ஆறவைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

பின்னர் காற்று புகாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைக்கவும்.இந்த பொடியை சேர்த்து
சிக்கன்,மட்டன் குழம்பு செய்யும் பொழுது மிகவும் சுவையாகவும்,வாசனையாகவும் இருக்கும்.