12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! 

0
38
#image_title

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளது.

நேற்று(அக்டோபர்7) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரத்திற்கு வடமேற்கில் 40 காலை மீட்டர் தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அது மட்டும் இல்லாமல் நேற்று(அக்டோபர்7) ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் தொடர்ச்சியாக 5 நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேற்று(அக்டோபர்7) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 320க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளளனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஜிந்தா ஜன், கோரியான் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜிந்தா ஜன் மாவட்டத்தில் 3 கிராமங்களில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பரா, பத்கிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் சில வீடுகள் முற்றிலும் அழித்துள்ளது. இந்நிலையில் ஹெராத் பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உயரமான கட்டிடங்களில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்ப