3 நாளில் BP குறைய தண்ணீருடன் இதை மட்டும் சேருங்கள்!! இனி ஆயுசுக்கும் தொல்லையே இல்லை!!
தற்பொழுது இருக்கும் வாழ்க்கை முறையில் அதிகப்படியானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகின்றனர். இது வேலைப்பளு மற்றும் குடும்பம் போன்ற காரணங்களால் இவ்வாறான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் கோபத்தையே வெளிப்படுத்துவர்.அவ்வாறு கோவத்தை வெளிப்படுத்தும் பொழுது அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது.
இந்த பதிவில் உயர் ரத்த அழுத்தத்தை எப்படி குறைப்பது மன அழுத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து முழுவதுமாக பார்ப்போம்.
அதேபோல இந்த உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படும். அதே போல உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் டீ,காபி, கோழி இறைச்சி போன்றவற்றை உண்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உயர் ரத்தை அழுத்தம் வந்து விட்டால் வீட்டு வைத்தியம் முறைப்படியும் குணப்படுத்தலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி:
தேவையான பொருட்கள்:
கடுக்காய்
சீரகம்
கடுக்காயில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளது.குறிப்பாக வாதம் பித்தம் கபம் இவை மூன்றையும் சரி செய்யும் தன்மை உடையது.அதுமட்டுமின்றி ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடும்.
செய்முறை:
கடுக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் இருக்கும் கொட்டையை தூக்கி எறிந்து விட்டு தோலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் அரை ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இந்த தண்ணீரானது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இது நன்றாக ஆறியதும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தினம்தோறும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே குடித்து விட வேண்டும்.
இவ்வாறு செய்து வர உயர் ரத்த அழுத்தமானது குறையும்.
கடுக்காயை பயன்படுத்தும் பொழுது ஒரு வேலைக்கு ஒரு காய் என்ற அளவில் தான் எடுக்க வேண்டும்.