விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

0
219
#image_title

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியே வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியில் இருந்து தமிழகம் மீழப்போகிறது.

மேலும், திமுக கட்சியினரே பாஜகவிற்க்கு தான் ஓட்டு போடுவர், திமுக கட்சியினரே அவர்களை தோற்கடிப்பர்.

511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

திமுகவினரின் திருட்டு மற்றும் ஊழலுக்கு எதிரான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுகவினரின் ஊழல்க்கு எதிராக பைல் ஒன்று, இரண்டு என மொத்தம் நான்கு ஆடியோக்கள் முன்பே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

author avatar
Savitha