பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை எனில் அவர் பார்மில் இல்லை என அர்த்தம் இல்லை!!! விராட் கோஹ்லியின் பயிற்சியாளர் கருத்து!!!

0
116
#image_title

பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை எனில் அவர் பார்மில் இல்லை என அர்த்தம் இல்லை!!! விராட் கோஹ்லியின் பயிற்சியாளர் கருத்து!!!

கிரிக்கெட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை என்றால் அவர் பார்மில் இல்லை என்பது தான் அர்த்தம் என்று கிடையாது என விராட் கோஹ்லியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றுகள், சூப்பர் 4 சுற்றுகள் என்று நடத்தப்பட்டது.

இதையடுத்து ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா அணியும், இலங்கை அணியும் தகுதி பெற்றது. இந்தியா அணியும், நடப்பு ஆசிய கோப்பை சாம்பியன் இலங்கை அணியும் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையில் கொழும்பு மைதானத்தில் இன்று(செப்டம்பர்17) நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக விராட் கோஹ்லி அவர்களுடைய பார்ம் முக்கியம் என்று விராட் கோஹ்லி அவர்களுடைய சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அவர்கள் “விராட் கோஹ்லி அவர்கள் 2023ம் ஆண்டில் சிறப்பான பார்மில் இருக்கின்றார். விராட் கோஹ்லி அவர்கள் பெரிய பெரிய ரன்களை எடுக்காமல் இருந்த ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் அது விராட் கோஹ்லி அவர்கள் பார்மில் இல்லை என்பதை குறிப்பது கிடையாது.

விராட் கோஹ்லி அவர்கள் ரன் அடித்தார். ஆனால் சதம் அடிக்கவில்லை. சதம் அடிக்கவில்லை என்றால் விராட் கோஹ்லி அவர்கள் பார்மில் இல்லை என்று கூறிவிட முடியாது. இப்போது விராட் கோஹ்லி அவர்கள் நன்றாக விளையாடி வருகிறார். விராட் கோஹ்லி அவர்களுடைய பார்ம் இந்தியாவுக்கு தேவை” என்று பேசியுள்ளார்.

மேலும் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடப் போகும் போட்டி குறித்து பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அவர்கள் “ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று(செப்டம்பர்17) நடைபெறவுள்ளது. இந்த ஆசியக் கோப்பையின் வெற்றி அடுத்து வரவிருக்கும் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கு ஊக்கத்தை அளிக்கும் உளவியல் சாதகமாக அமையும்.

இன்று(செப்டம்பர்17) நடைபெறும் இந்த இறுதிப் போட்டி ஒரு பெரிய அளவிலான போட்டி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் ஆசியக் கோப்பை தொடரின் கோப்பையை வெல்வார். மேலும் ஆசியக் கோப்பையின் சாம்பியன் ஆவார். அனைத்து ஆசிய அணிகளையும் வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. இந்தியா இன்று(செப்டம்பர்17) நடைபெறும் போட்டியிலும் உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Previous articleKH234 படம் பற்றி அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்!! இயக்குநர் மணிரத்னம் கூறிய பதிலை பாருங்க!!!
Next articleஅந்த விஷயத்தில் என்னை அட்லி ஏமாற்றி விட்டார்!!! நடிகை பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்!!!