சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!!

Photo of author

By Rupa

சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!!

தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மக்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்ள எலி மருந்து போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் உயிரைக் கொல்லும் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலி மருந்துகளை மொத்தமாகவோ சில்லறையாகவோ வாங்க முற்றிலும் தடை விதித்ததோடு இதற்கு இணையான ஆறு பூச்சி மருந்துகளுக்கும் தடை விதித்துள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளிக்க முடியாமல் இவ்வாறான முடிவுகளை எடுக்கும் பொழுது அதிக அளவில் பூச்சி மருந்து எலி மருந்து போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதனை தமிழக அரசு தற்பொழுது முற்றிலும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அரசாணை மீறி இதனை விற்று வந்தாலோ வாங்கி வைத்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.