மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!!
கொரோனா தொற்று ஆனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதி முதல் இன்புளுயன்சா H3N3 வைரஸ் ஆனது பரவி வந்த நிலையில் தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது.
வடமாநிலத்தவர்களுக்கு அதிக அளவு இந்த வைரஸ் தொற்றானது பாதிப்பை தந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பரவலாகி உள்ளது. இந்த வைரஸ் இருக்கு தற்பொழுது இருவர் உயிரிழந்துள்ளனர். எனவே அனைத்து மாநில அரசும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் பொது இடங்களில் கூட்டம் கூட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கட்டாயம் பொதுமக்கள் சிறுவர்கள் சிறுமிகள் என அனைவரும் பள்ளி கல்லூரிகள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கொண்டு இந்த வைரஸ் தொற்று ஆனது அதிகரித்து பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தால் மீண்டும் ஊரடங்கு போடும் நிலைக்கு தள்ளப்படலாம் என கூறுகின்றனர்.
மேலும் தற்பொழுது மாறிவரும் பருவநிலை மாற்றத்தாலும் இந்த வைரஸ் தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது குறிப்பாக சிறுவர்கள் மற்றும் 50 வயதுடைய பெரியவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் எனக் கூறுகின்றனர்.