இந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்!
நரம்பு தளர்ச்சியை செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தும் முறைகள் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இளம் வயதில் இருந்து ஏற்படுகிறது.
இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்பதை விரிவாக காணலாம். ஜீரண சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பொருள் மிளகு. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நரம்பு தளர்ச்சி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
மிளகில் உள்ள காரச் தன்மையானது சளி,இருமல் ஆகியவற்றை போக்கும் தன்னை கொண்டுள்ளது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை திப்பிலியில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. திப்பிலியினை பொடி செய்து ஒரு டம்ளர் பாலுடன் பருகி வருவதன் காரணமாக சளி இருமல் பிரச்சனைகள் குணமடையும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முற்றிலும் குணப்படுத்த உதவும்.
இரண்டு ஸ்பூன் சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் திப்பிலி பொடி ஆகிய மூன்றையும் ஒரு டம்ளர் நீருடன் கலந்து நன்றாக காய்ச்சி அதன் பிறகு வடிகட்டி காலை மற்றும் இரவு நேரங்களில் குடித்து வருவதன் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.