உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பண கஷ்டம், கடன் பிரச்சனை இருக்கிறது. கையில் சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் கொழிக்க சில வழிகளை கடைபிடியுங்கள்.

வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க சில வழிகள்:-

1)மஞ்சள் துணியில் வாசனை நிறைந்த பச்சைக் கற்பூரம், சோம்பு, ஏலக்காய் சேர்த்து மூட்டையாக கட்டி வீட்டின் குபேர மூலையில் வைத்து அதற்கு தீபம் காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிறைந்து இருக்கும்.

2)வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது இரண்டு திரிகளை போட்டு தீபம் ஏற்றினால் பணம் கஷ்டம் நீங்கி வரவு அதிகரிக்கும்.

3)அரிசி, உப்பு, பருப்பு, புளி போன்றவை வீட்டில் எப்பொழுதும் குறைவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அவை குறைந்தாலோ, காலியானாலோ வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

4)எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் கிராம்பு, மிளகு சொருகி கொள்ளவும். அவை வெளியில் தெரியாதவாறு எலுமிச்சை முழுவதும் மஞ்சள், குங்குமம் தடவிக் கொள்ளவும். இதை நிலை வாசலின் 2 பக்கங்களிலும் வைத்தால் கண் திருஷ்டி நீங்கி வீட்டில் நேர்மறை எண்ணங்கள் பெருகும். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

5)வீட்டை சுத்தம் செய்யும் பொழுது வரும் குப்பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் சேர்த்து வைப்பதை முற்றிலும் தவிருங்கள். இப்படி குப்பைகளை சேர்த்து வைப்பதால் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

6)உங்கள் பணப் பையில் வாசனை பொருளான புதினாவின் 2 இலைகளை வையுங்கள்.இந்த புதினாவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றவும்.இப்படி செய்தால் பணப் பிரச்சனை ஏற்படாமல் அவை பணம் அதிகளவில் சேரும்.